மரம் வளர்ப்போம்... இயற்கை வளம் காப்போம்… விதைத்துக்கொண்டே இருப்போம்... விழும் விதைகள் விருட்சங்களாகட்டும்... ஜேபி அக்ரோ ஃபுட்ஸ் நிறுவனத்தின் சமூக சிந்தனையுடன் கூடிய ஒரு தயாரிப்பு இந்த விதைப்பந்துகள்.
நாங்கள் குறிப்பாக வேப்பமர விதைகளை சேகரித்து, பதப்படுத்தி விதைப்பந்து தயாரித்துள்ளோம்.
இதை திறந்தவெளியில், மணற்பாங்கான பகுதியில், சாலை ஓரங்களில் ஆற்றோரங்களில், குளக்கரையில், நிலத்தில் வீசிவிட்டு செல்லவும்.
மழை பெய்யும் காலங்களில் அந்த விதை வெடித்து செடியாக மரமாக வளர்ந்து நம் காலத்திற்கு பிறகு நம் சந்ததிகளுக்கு பயன்தரும்.
நீங்களும் எங்களிடமிருந்து மொத்தமாக விதைப்பந்துகளைப் பெற்று தங்கள் நிறுவனத்தின் பெயரையும் தாங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் ஒவ்வொருவருக்கும் பரிசாக இதைக் கொடுத்து இந்த பூமிப் பந்தை விதைப்பந்துகளால் இயற்கை வளம் பெற செய்யலாம்.
உங்கள் வணிக நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவருக்கும் இந்த விதைபந்துகளை கொடுக்கலாம்.
மொத்தமாக பெற எங்களை கீழ்க்கண்ட முகவரியில் அல்லது தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
JB Agro Foods
New No 36, Old No 56,
Kalaimagal Nagar 2nd Main road,
Ekkatuthangal, Chennai 600032.